Thursday, May 3, 2007

திரை அரங்குகளில் வாகன நிறுத்த கட்டணம்

சமீபத்தில் சென்னை நகரின் முக்கிய திரை அரங்கில் ஒரு திரைப்படம் பார்க்க சென்றேன்.என் இரு சக்கர வாகனத்தை,அதன் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு டோக்கன் வாங்கினேன்.அப்போது அங்கு இருந்த சுவற்றில் இருந்த ஒரு வாசகம் கண்டு திடுக்கிட்டேன்.

'parking vehicles at owner's risk' என்று எழுதப் பட்டிருந்தது. நான் அந்த டோக்கன் கொடுப்பவரிடம் இந்த மாதிரி எழுதியிருப்பதின் அர்த்தம் என்ன என்று கேட்டேன். அங்கு நிறுத்தப் படும் வாகனங்களின் பாதுகாப்பிற்கு, தங்கள் ஏஜன்சி பொறுப்பல்ல என்று விளக்கமளித்தார். 'நீங்கள் பொறுப்பல்ல என்றால் எதற்கு பணம் வசூல் செய்கிறீர்கள்?' என்று கேட்டேன். 'அது வண்டி நிறுத்துவதற்கான கட்டணம் மட்டும்தான்..வண்டியின் பாதுகாப்பிற்காக அல்ல..' என்றார். இது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டேன். சரியான பதில் இல்லை.

திரைஅரங்கு மேலாளரை கண்டு விளக்கம்கேட்கப் போனேன். அங்கிருந்தவர்கள் என்ன விசயம் என்று வினவினார்கள். விசயத்தை கூறி விளக்கம் கேட்டேன். அவர்கள் அவர்களுக்குள் ஒரு பார்வை பார்த்துக் கொண்டு 'மானேஜர் இல்லை..வெளியே போய் இருக்கிறார்...அப்புறமா வாங்க..'
என்று கூறி அனுப்பி விட்டார்கள்.

திரைஅரங்குகள் வாகனம் நிறுத்துவதற்கு நம்மிடம் பணமும் வாங்கிக் கொண்டு,பாதுகாப்பு மட்டும் கிடையாது என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்?

1 comment:

கதிரவன் said...

இதனால்தான் நிறையப்பேர் திருட்டு சி.டி. வாங்கி வீட்ல இருந்தே 'நிம்மதி'யா படம் பாக்கறாங்களோ ??