Thursday, May 3, 2007

பெரியார்-ஒரு திரைப்படம்

இந்த 'பெரியார்' திரைப்படத்தை பற்றி சில மாறுபட்ட கருத்துக்களும்,விமர்சனமும் வரலாம். ஆனால் அதையும் மீறி இந்தப் படம் மக்களால் பாராட்டபடும். திரைக்கதை அருமையாக அமைக்கப்பட்டு, நேர்த்தியான முறையில் படமாக்கப்பட்டு வெளிவந்திருக்கும் இந்த படத்தை அனைவரும் அரங்குக்கு சென்று பார்க்கவேண்டும். இளைய தலைமுறையினருக்கு பெரியார் பற்றிய தாக்கத்தை இந்தப் படம் நிச்சயம் அதிகரிக்கும்.

படத்தில் உள்ள பாராட்டுக்குறிய விசயங்கள்:


1.திரைக்கதை.

2.ஒளிப்பதிவு.

3.சத்யராஜ் நடிப்பு..பெரியாராகவே வாழ்ந்திருக்கிறார்.

4. இசை.

5.இயக்கம்.


குறைகள் என்று நான் உணர்ந்தது:

1. அரசியல் தலைவர்கள் சிலரின் உருவ அமைப்பில் அவ்வளவாக கவனம் செலுத்தாதது.

2. அப்போதைய அரசியல் தலைவர்களை அவசர அவசரமாக இணைத்து காண்பித்தது.

3. பெரியார் அவர்கள் எப்போதும் அரசியல் கூட்டங்கள்,போராட்டம் என்று எப்போதும் பெரும் மக்கள் கூட்டத்தில் இருந்தவர். ஆனால் படத்தில் ஒரு சிறிய அளவிலான மக்கள் மத்தியில் உலா வருவது போல் அமைக்கப்பட்டிருப்பது.

4. பெரியார் இடம் பெறும் அந்த சோக பாட்டு.

5. ஒரு சில இடங்களில் சிறிய வசனக் கோர்வைக்காக சற்று நீளமான காட்சியை அமைத்திருப்பது.(எ.கா) தாசிவீட்டில் செலவு கணக்கு பார்ப்பது, அம்பேத்கார் சம்பந்தப்பட்ட காட்சி.

6. இறுதியில் வரும் கருணாநிதி சம்பந்தபட்ட காட்சி, திணிக்கப்பட்ட மாதிரி இருப்பது.


இந்தப் படம் சரியாக எடுக்கப்படவில்லை என்று சொல்லுபவர்களுக்கு.....


பெரியார் 90 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்தவர்...நிறைய சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நடந்திருக்கும். அந்த அனுபவங்களை வைத்து இந்த மாதிரி நிறைய படங்களை எடுக்கலாம். எதிர்காலத்தில் அந்த மாதிரி எடுக்கப்படலாம்.இப்போது இந்த 'பெரியார்' படத்தை பாராட்டலாம்.

No comments: