Thursday, May 3, 2007

ரஜினி 'வரலாமா'?: கருத்து கணிப்பு- ரசிகர்கள் கடுப்பு

தினகரன் நாளிதழும் சன் டிவியும் இணைந்து ஏ.சி.நீல்சன் என்ற சர்வதேச கருத்துக் கணிப்பு நிறுவனத்தின் உதவியோடு தமிழகம் முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தி வருகின்றன.

அதில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாமா, கூடாதா என்று கேட்டு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவால் அவரது ரசிகர்கள் கடுப்படைந்துள்ளனர்.

ரஜினி அரசியலுக்கு அவசியம் வர வேண்டுமா என்ற கேள்வியை முன்வைத்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.தமிழகம் முழுவதும் 1624 பேரிடம் கருத்துக் கணிப்பு கேட்கப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களில் 487 பேர் மட்டுமே ரஜினி அரசிலுக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளனர். திருநெல்வலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தான் அதிகபட்சமாக 37 சதவீதம் பேர் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.ெசன்ைன மாவட்டத்தில் 36 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். திருச்சி பிராந்தியத்தில் 21 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனராம்.

ரஜினி அரசியலுக்கு வரத் ேதவையில்லை என்று 40 சதவீதம் பேரும், அது வீண் வேலை என்று 14 சதவீதம் பேரும் கருத்து ெதரிவித்துள்ளனர். அதாவது 54 சதவீதம் பேர் ரஜினி அரசியலுக்கு வரத் தேவையில்லை என்று கூறியுள்ளனர்.

ரஜினி ஏன் அரசியலுக்கு வரக் கூடாது என்று கேட்ட கேள்விக்கு கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்கள், அவர் நல்ல மனசுக்காரர் என்று பதில் அளித்துள்ளனர்.

ரஜினி அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படும் என 10 சதவீதம் பேர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினி ஏன் அரசியலுக்கு வரக் கூடாது என்ற கேள்விக்கு அவர் நடிகர் என்று அவரை எதிர்ப்பவர்கள் கூறியுள்ளனர்.

இந்தக் கருத்துக் கணிப்பு ரஜினி ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியையும், ெகாந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்நத் பிரமுகர் ரஜினி முருகன் கூறுகையில், இது பாரபட்சமான ஒரு கருத்துக் கணிப்பு. இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள். இப்படி ஒரு அரைவேக்காட்டுத்தனமான கருத்துக் கணிப்பை வெளியிட வேண்டிய அவசியம் என்ன.எங்களது தலைவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்களைச் சந்திக்க ஆரம்பித்துள்ளார். இதை ஆளுங்கட்சியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.ரஜினி ரசிகர்கள் மத்தியில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக உள்ளனர். கடந்த சட்டசபைத் தேர்தலின்போது ரசிகர் மன்றத்தை விட்டு விலகியவர்கள் மீண்டும் வர ஆரம்பித்துள்ளனர். உண்மையை நீண்ட காலத்திற்கு மறைக்க முடியாது. ரஜினி செல்வாக்கின் நிழலைக் கூட இதுபோன்ற கருத்துக் கணிப்புகளால் தொட முடியாது என்றார் கோபமாக.

இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணாவைத் தொடர்பு கொண்டு கருத்து கேட்டோம். முதலில் கருத்து தெரிவிக்க மறுத்தார்.நீண்ட வற்புறுத்தலுக்குப் பின்னர் அவர் கூறுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து தமிழக மக்களுக்குத் தெரியும். அவர்களது இதயங்களில் ரஜினிக்கு நிரந்தர இடம் கொடுத்துள்ளனர் என்றார்.

http://thatstamil.oneindia.in/specials/cinema/specials/rajini_070502.html

1 comment:

கதிரவன் said...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா :)